இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இலங்கைக்கு சுறுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாவே அணி ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடர்களில் விளையாடி வருகின்றது இதில் ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
கடந்த வாரம் ஆரம்பமான T20 தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்ற போதும் இரண்டாவது போட்டியில் சிம்பாப்வே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் இறுதி போட்டி இன்று ஆர். பிரேமதாச மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரமபமாகவுள்ளது.
இந்நிலையில் போட்டி தொடர்பான ஸ்கொர் விபரங்களை www. aathavannews.com என்ற எமது இணையதளத்தில் பார்வையடைலாம்.



















