உக்ரைனுக்கு இந்திய பிரதமர் மோடியின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது என அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ரிச்சர்ட் வர்மா தெரிவித்துள்ளார்.
போலந்து நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கிருந்து போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு இன்று விஜயம் செய்யவுள்ளார்.
இந்நிலையில், உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு வருகைதந்துள்ள ரிச்சர்ட் வர்மா, டில்லியில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்.
இதன்போது பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த பயணம் முக்கியத்துவம் வாய்நதது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ரஷ்யா உடனான இந்தியாவின் நீண்ட கால உறவை அமெரிக்கா புரிந்து கொண்டுள்ளதுடன், இது போரின் சகாப்தம் அல்ல, இது அமைதிக்கான நேரம் என பிரதமர் மோடி கூறியது பாராட்டுக்குரியது எனவும் வலியுறுத்தியுள்ளார்.


















