• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
பிரிந்திருந்த திருடர்கள் ஒன்று கூடிவிட்டனர் – ஜனாதிபதியின் முழுமையான உரை

பிரிந்திருந்த திருடர்கள் ஒன்று கூடிவிட்டனர் – ஜனாதிபதியின் முழுமையான உரை

Kavipriya S by Kavipriya S
2025/01/31
in ஆசிரியர் தெரிவு, இலங்கை
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி வல்வெட்டித்துறை பிரதேசத்தில் இன்று நண்பகல் சிநேகபூர்வ சந்திப்புக்களில்  பங்கேற்றார்

மக்களை பிரிப்பதற்கு பதிலாக மக்களை இணைக்கும் அரசியலை இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தமது அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

வல்வெட்டித்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிவ் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டார்

அதன்படி அவர் ஆற்றிய உரையில்,

கடந்த பொதுத் தேர்தலில் எம்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வாக்குகள் என்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைப்பதற்கான வாக்குகளாக மட்டும் கருதப்படவில்லை.

இந்த வாக்குகள் என்பன அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பதற்கான வாக்குகளாகவே நாம் பார்க்கிறோம்.

வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மலையகம் என அனைத்து மக்களின் அங்கீகாரத்தையும் பெற்ற இலங்கையின் முதலாவது அரசாங்கமாக எமது அரசாங்கம் தான் காணப்படுகிறது.

கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள், வடக்குக்கு தனியான அரசியலையும், கிழக்கு தனியானதொரு அரசியலையும் தெற்கிற்கு தனியானதொரு அரசியலையும்தான் செய்தார்கள்.

இவர்கள் நாட்டு மக்களை பிரிக்கும் அரசியலில்தான் ஈடுபட்டார்கள்.

எவ்வளவு தூரத்திற்கு இவர்கள் மக்களை பிரித்தார்கள் என்றால், யுத்துமொன்று ஏற்படும்வரை பிரித்தார்கள்.
இதனால்தான் எமது பரம்பரை யுத்தம் செய்தது.

சந்தேகம், முரண்பாடுகளுடன்தான் அந்தப் பரம்பரை வாழ்ந்தது.

இந்த நிலைமை மீண்டும் வேண்டுமா? நாம் பிரிய வேண்டுமா?

மக்களை பிரிப்பதற்கு பதிலாக மக்களை இணைக்கும் அரசியலை இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாம் மேற்கொண்டுள்ளோம்.

இதற்கு முன்னர் இந்தப் பிரதேசத்திற்கு ஜனாதிபதி உள்ளிட்ட எந்தவொரு அரசியல்தலைவரும் வருகைத் தந்துள்ளார்களா? – இல்லை.

நாம் மக்களை ஒன்றிணைக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பதால்தான், வல்வெட்டித் துறைக்கு வருகைத் தந்துள்ளோம்.

நாம் இந்த ஒற்றுமையை மேலும் பலப்படுத்த வேண்டும்.

நான் இம்முறை வரவு- செலவுத்திட்டத்தில் புதியதொரு விடயத்தை கொண்டுவரவுள்ளேன். ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

ஆனால், அனைத்து மக்களும் கொண்டாடும் ஒரு பண்டிகை எமக்கு வேண்டாமா?

அதற்காகத்தான் அனைத்து மக்களின் கலாசாரம், உணவு, உடை, பண்பாட்டை பரிமாற்றிக் கொள்ள ஒரு விசேட தினத்தை ஒக்டோபரில் நடத்த தீர்மானித்துள்ளோம்.

நாம் பிரிந்திருந்தாலும் எமது பிள்ளைகள் பிரிந்துவாழ இடமளிக்க முடியாது. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக சாதாரண மக்களின் அரசாங்கமொன்று அமைந்துள்ளது.

இதற்கு முன்னர் எல்லாம் பிரபுக்கள்தான் ஜனாதிபதியாகியுள்ளார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில்கூட இரண்டு ஜனாதிபதிகளின் மகன்கள் வேட்பாளர்களாக களமிறங்கினார்கள்.

எனினும், நாட்டு மக்களோ பிரபுக்களிடம் இருந்த அதிகாரத்தை சாதாரண மக்களிடம் வழங்க வேண்டும் என்று ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானித்தார்கள்.

நாம் யாரும் அரசியல் பின்புலத்தினால் இங்கு வந்தவர்கள் அல்ல. இது உங்களுக்கான அரசாங்கம். எமது அரசாங்கம்.

இதனால்தான் எமக்கு சவால்கள் பல உள்ளன. முதலில் கிராமிய மட்டத்தில் உள்ள வறுமையை இல்லாதொழிக்க வேண்டும்.

நாம் படிப்படியாக இந்தப் பிரச்சினைகளை தீர்க்க தயாராக உள்ளோம். கிராமிய மட்டத்திலான வறுமையை கல்வியே சிறந்ததொரு ஆயுதமாகும்.

எனவே, அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வியை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்திற்கு உள்ளது.

மேலும். அனைத்து பாடசாலைகளினதும் ஆசிரியர் பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மாவட்ட செயலாளருக்கு ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடசாலைகள் தொடர்பாக அறியப்படுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

அத்தோடு, யாழ்., பொது நூலகத்திற்காகவும் வரவு- செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கியுள்ளோம். 300 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பாடசாலைகளில் உள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும், பாடசாலை உபகரங்களை பெற்றுக் கொள்ள 6 ஆயிரம் ரூபாயை வழங்கவுள்ளோம்.

அத்தோடு. 250 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பாடசாலைகளில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை காலணியை பெற்றுக் கொள்ள 3 ஆயிரம் ரூபாயை வழங்கவுள்ளோம்.

பாடசாலையில் இலவசமாக உணவு வழங்க ஒதுக்கப்பட்டிருந்த 60 ரூபாயை 100 ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

சீனா அரசாங்கம் அடுத்த வருடத்திற்குமான பாடசாலை சீருடையை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன.
இவ்வாறு கல்விக் கட்டமைப்பை பலப்படுத்துவதே எமது பிரதான நோக்கமாகும்.

மேலும், காங்கேசன்துறை, பரந்தன், மாங்குலத்தில் 3 தொழிற்பேட்டைகளை அமைக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதில் முதலீடு செய்ய வருமாறு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். இதிலிருந்து தொழில் பிரச்சினையும் இங்கு தீர்க்கப்படும். இவ்வருடத்திலிருந்து அரச துறையிலுள்ள வெற்றிடங்களையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

விசேடமாக எமது பொலிஸ் துறையில் தமிழ் மொழி பேசக்கூடிய அதிகாரிகள் மிகவும் குறைவாகவே உள்ளார்கள்.
இந்த வருடத்தில் 2000 ஆயிரம் பேரை புதிதாக பொலிஸில் இணைக்க எதிர்ப்பார்த்துள்ளோம்.
எனவே, தமிழ் இளைஞர்கள் இதில் இணையுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்.

தற்போது இங்கே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமையை நான் அறிவேன். இளைய சமூகம் இதற்கு அடிமையாகியுள்ளனர்.

இதனை நிறுத்த நாம் சக்திவாய்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம். இதற்கு மக்களின் ஒத்துழைப்பும் தேவையாகும்.

வடக்கில் காணிப் பிரச்சினை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. எமது கொள்கையே மக்களின் காணிகள் மக்களிடம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான்.

பாதுகாப்புக்கும் அபிவிருத்திக்கும் காணியை எடுத்துக் கொள்ளும் உரிமை அரசாங்கத்திற்கு இருந்தாலும், தேவையில்லாமல் காணியை வைத்துக் கொள்ளும் உரிமை யாருக்கும் கிடையாது.

1500 இற்கும் மேற்பட்ட நபர்கள் இன்னமும் அகதி முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு விரைவிலேயே நாம் வீட்டு வசதிகளை செய்ய நடவடிக்கை எடுப்போம்.

அதேநேரம், வடக்கில் மீனவர்களது பிரச்சினையும் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. எல்லைத்தான்டிய மீன்பிடி நடவடிக்கையினால் எமது மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

எமது கடற் வளம் அழிவடைவதோடு, எமது மீனவர்களுக்கு கடலுக்கே செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது.
இதுதொடர்பாக நாம் இந்திய அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். கடற்படையினரிடமும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கூறியுள்ளோம்.
இது உங்களுடைய கடல். உங்களுக்குத்தான் இங்கே மீன் பிடிக்க உரிமையுள்ளது. இந்தப் பிரச்சினையை தீர்க்க சில காலம் சென்றாலும், இது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்பதை நாம் அறிவோம்.

சட்டவிரோதமான டொலர் படகுகளைப் பயன்படுத்தி, எமது கடல் வளம் அழிக்கப்படுது நிறுத்தப்பட வேண்டும்.
இதனை நாம் நிச்சயமாக செய்வோம்.

எமது நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் கடந்த தேர்தல்களில் மக்களின் பிரதான எதிர்ப்பார்ப்பாக இருந்தது.

மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்தார்கள். இதனை நாம்தான் நிறுத்தியுள்ளோம்.
காங்கேசன்துறை பகுதியில் ஜனாதிபதி மாளிகையொன்று உள்ளது. இங்கே ஒரு ஜனாதிபதி மாளிகை தேவையா?
எனக்கு இந்த மாளிகை தேவையில்லை. இதுதொடர்பாக நான் ஆளுநரிடமும் மாவட்ட செயலாளருக்கும் ஒரு விடயத்தை நான் கூறினேன்.
இந்த மாளிகையை எப்படி பயன்படுத்தலாம் என்பது தொடர்பான திட்டத்தை வழங்குமாறு அவர்களிடம் கோரியுள்ளேன்.

அங்கு பல்கலைக்கழகமொன்று வேண்டுமென்றால் அதற்கு அனுமதி வழங்கத் தயார்.
கலாசார மையம் ஒன்று தேவையென்றால் அதற்கும் அனுமதி வழங்கத் தயார்.
இங்கு மட்டுமல்ல, நுவரெலிய, அநுராதபுரம், மஹியங்கனை, கதிர்காமத்தல் உள்ள அனைத்து ஜனாதிபதி மாளிகைகளுக்கும் இதே தான் நிலைமை.
இது மக்களின் பணம். மக்களின் பணத்தை வீணாக்கக்கூடாது. இந்தப் பணத்தை தேவையில்லாமல் செலவு செய்யக்கூடாது.

இது வறுமையான நாடாகும். இங்குள்ள மக்கள் வறுமையானவர்கள். ஆனால், மக்களை ஆளும் தலைவர்களோ சுகபோக வாழ்க்கையைத்தான் அனுபவித்து வருகிறார்கள்.
இந்த அரசியலை நாம் மாற்றியுள்ளோம். இதுதான் எமக்கு இன்று தேவை.
நாட்டை அபிவிருத்தி செய்யும் பணிகளை நாம் ஆரம்பித்துள்ளோம். விசேடமாக வடக்கை பிரதானமாகக் கொண்டு பல திட்டங்களை கொண்டுவரவுள்ளோம்.

இதற்கான நிதியை இவ்வருட வரவு- செலவுத்திட்டத்தில் ஒதுக்கியுள்ளோம்.
இங்குள்ள விவசாயிகள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வினை வழங்குவோம்.
எமது அடிப்படை பிரச்சினைகள், ஏன் யுத்ததின் பின்னணியில்கூட பொருளாதாரப் பிரச்சினை தான் காணப்படுகிறது.

எனவே, இதற்கு தீர்வினைக் கண்;டாலே, பல பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
மொழி ரீதியான பிரிவினையை இல்லாது செய்ய வேண்டும். தமிழ் மொழிலான அரச அதிகாரிகள் எமக்கு தேவைப்படுகிறார்கள்.

எமது நாட்டின் மீண்டும் ஒரு மத ரீதியிலான, இனரீதியிலான முரண்பாடுகள் எழ நாம் அனுமதிக்கப் போவதில்லை.
இனவாதத்துடன் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவோம்.
மீண்டும் முரண்பாடுகளை செய்துக் கொண்டு எமது பிள்ளைகளின் எதிர்க்காலத்தையும் அழிக்கப் போகிறோமா?
தனியானதொரு நாட்டை பெற்றுக் கொடுப்போம் என்றுக்கூறி தேர்தலில் களமிறங்கியவர்கள், குடும்ப அதிகாரத்தால் தேர்தலில் களமிறங்கியவர்கள் என அனைவரையும் யாழ் மக்கள் நிராகரித்துள்ளார்கள்.

இதிலிருந்தே நீங்கள் பிரிவினையை விரும்பாதவர்கள் என்பது புலப்படுகிறது. அரசியல்வாதிகள்தான் பிரிவினை வாதத்தையும் இனவாதத்தையும் தூண்டி விடுகிறார்கள்.
தென்பகுதியில் இப்போதும் கூட சில அரசியல்வாதிகள் தங்களின் இருப்புக்காக இனவாதத்தை தூண்ட முற்படுகிறார்கள்.

இந்த அரசியல்வாதிகளுக்கு இனவாதிகள் தேவையாக இருக்கலாம். ஆனால், மக்களுக்கு தேவையில்லை.
நாம் ஐக்கியமாக வேண்டும். இங்கே உள்ள வல்வெட்டித்துறை வாழ் குடும்பங்களைப் போன்றதொரு குடும்பத்திலிருந்துதான் நாம் இங்கு வந்துள்ளோம்.
நாமும் உங்களைப் போல சாதாரண மக்கள்தான்.

எனவே, உங்களின் இந்த நம்பிக்கையை நாம் சீர்குலைக்க மாட்டோம்.
மக்களின் பணத்தை திருடியவர்களுக்கு தண்டனைக் கொடுக்க வேண்டுமா? – இல்லையா?
இவர்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தண்டனைக் கிடைக்கும்.

பிரிந்திருந்த திருடர்கள் அனைவரும் நேற்று ஒரு கூட்டத்தை நடத்தி, ஒன்றிணைவது தொடர்பாக ஆராய்ந்துள்ளார்கள்.

இந்தக் கூட்டத்தில் யாரெல்லாம் இருந்தார்கள் தெரியுமா? ஒருவர் மத்திய வங்கியை கொள்ளையடித்தவர்.
இன்னொருவர் அவுஸ்ரேலியாவில் வெள்ளையர் ஒருவரை ஏமாற்றியவர்.
இன்னொருவர் எரிபொருளில் ஊழல் செய்தவர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தப்பித்துக் கொள்ள முற்படுகிறார்கள்.

இவர்களுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்தவே இவர்கள் முற்படுகிறார்கள்.
ஆனால், மக்கள் எம்முடன்தான் இணைந்துள்ளார்கள். எனவே, இவர்களுக்கு எதிரான நடவடிக்கையை ஒருபோதும் நிறுத்த முடியாது.

மீண்டும் இந்த நாட்டை குற்றவாளிகளுக்கோ, மோசடிக் காரர்களுக்கோ, திருடர்களு;ககோ கொடுக்க முடியாது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

என் இனிய பொன் நிலாவே பாடலின் உரிமம் இளையராஜாவிடம் இல்லை

Next Post

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்!

Related Posts

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!
இலங்கை

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

2026-01-24
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!
இலங்கை

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026-01-24
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!
இலங்கை

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2026-01-24
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!
இலங்கை

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

2026-01-24
இன்றும் தொடரும் அரச வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு!
இலங்கை

இன்றும் தொடரும் அரச வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு!

2026-01-24
ஆறாம் ஆண்டிற்கான புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு ஆதரவாக நாவலப்பிட்டியில் பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!
இலங்கை

ஆறாம் ஆண்டிற்கான புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு ஆதரவாக நாவலப்பிட்டியில் பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

2026-01-24
Next Post
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் சந்திப்பு!

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்!

வானிலையில் நாளை முதல் மாற்றம்!

வானிலையில் நாளை முதல் மாற்றம்!

வாகன இறக்குமதி தடையை நீக்கி வர்த்தமானி வெளியீடு!

வாகன இறக்குமதி தடையை நீக்கி வர்த்தமானி வெளியீடு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

0
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

0
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

0
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.