இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றதுள்ளது .
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில், 191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
இதற்கமைய 2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

















