அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் டேவிட் பூன் (David Boon), சர்வதேச போட்டி நடுவராக தனது 14 ஆண்டுகால பணியை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளார்.
புதன்கிழமை (ஏப்ரல் 30) சட்டோகிராமில் ஜிம்பாப்வேக்கு எதிரான பங்களாதேஷ் அணியின் உறுதியான டெஸ்ட் வெற்றியின் போது டேவிட் பூன் தனது கடைசி போட்டியில் நடுவராக பணியாற்றினார்.
64 வயதான பூன், 389 சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார்.
மேலும், அவுஸ்திரேலியாவுக்காக தனது 12 ஆண்டுகால விளையாட்டு வாழ்க்கையை கொண்டிருந்த அவர், 26 சர்வதேச சதங்கள் உட்பட 13,386 ஓட்டங்களை குவித்தார்.
1989 ஆம் ஆண்டு பெர்த்தில் நியூசிலாந்திற்கு எதிராக இரட்டை சதமும், மூன்று சதங்களும் அவரது கிரிக்கெட் வாழக்கையில் மைல்கல்லாகும்.
துடுப்பாட்ட வரிசையில் வழக்கமாக 3 ஆவது இடத்தில் களமிறங்கும் டேவிட் பூன், நடுவராக பணியாற்றுவதற்கு முன்பு 11 ஆண்டுகள் தேசிய தேர்வாளராகவும் கடமையாற்றினார்.
இப்போது அவர் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் வாரியத்தில் இணைவார்.
இதேவேளை, தொழில் வாழ்க்கையில் உலகம் முழுவதும் அவர் சம்பாதித்த புகழை சுட்டிக்காட்டிய ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா, கிரிக்கெட் வாழ்க்கையில் பூனின் பங்களிப்புகளைப் பாராட்டினார்.