உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஜப்பானை முந்தி இந்தியா உருவெடுத்துள்ளது.
அடுத்த இரண்டரை ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகளில் ஜெர்மனியை விஞ்சி மூன்றாவது இடத்தைப் அது பிடிக்கும் என்று இந்திய நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஏப்ரல் 2025 உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம், 2025-26 (FY26) நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4.187 டிரில்லியன் டொலர்களை எட்டும் என்று கணித்துள்ளது.
இது 2025 நிதியாண்டில் ஜப்பானின் $4.186 டிரில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை முந்தியுள்ளது.
அடுத்த நிதியாண்டிற்கான IMF-இன் கணிப்பு, இந்தியாவிற்கும் ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையேயான பரந்த இடைவெளியைக் காட்டுகிறது.
2026 ஆம் ஆண்டில் ஜப்பானின் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி $4.373 டிரில்லியனாக இருக்கும் என கணிக்கப்படும் நிலையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நிதியாண்டு 2027 ஆம் ஆண்டில் $4.601 டிரில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



















