முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு ஜூன் மாதம் 23ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2016ம் ஆண்டு அப்போதைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டிற்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் காரியாலயத்திற்கு முன்பாக பாதையை இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (26) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆராயப்பட்டது.
பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சுகயீனமடைந்துள்ள காரணத்தால் வேறு ஒரு தினமொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் வழக்கு ஜூன் 23க்கு ஒத்திவைக்கப்பட்டது.















