ஈரானில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை தற்போது 3,597 ஆக உயர்வடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் காரணமாக அந்த நாடுகளில் இருந்து இந்தியர்கள் அவசரம் அவசரமாக ஊர் திரும்பினார்கள். அவர்களை அழைத்து வர இந்திய அரசு ‘ஒபரேஷன் சிந்து’ என்ற நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன்பு போர் முடிவுக்கு வந்தது. இருப்பினும் ஈரானில் இருந்து இந்தியர்களின் வெளியேற்றம் தொடர்ந்தது. நேற்று முன்தினம் மாலை 296 பேரும், நேற்று அதிகாலை 272 பேரும் நாட்டிறகு திரும்பினர்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 10.30 மணிக்கு மேலும் 173 பேர் வருகை தந்தனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை சிறப்பு விமானங்கள் மூலம் வெளியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை 4,415 ஆக உயர்வடைந்துள்ளது.
இதன்படி ஈரானில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை 3,597 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை இஸ்ரேலில் இருந்து சுமார் 818 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



















