போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவுக்கு பிணை வழங்குமாறு கோரி நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த்இ ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே, போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் நேற்று காலை கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதோடு அவர் இ நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கு பிணை வழங்குமாறு கோரி சிறப்பு நீதிமன்றில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















