நேற்று ( ஜூன் 30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் திருத்தியமைத்துள்ளது.
அதன்படி,
ஒட்டோ டீசல் லீட்டருக்கு 15 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதன் புதிய விலை ரூ.289
ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டருக்கு 12 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதன் புதிய விலை ரூ.305
மண்ணெண்ணெய் லிட்டருக்கு 07 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதன் புதிய விலை ரூ.185
எனினும் 95 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சூப்பர் டீசல் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை திருத்தத்தை திருத்தியமைத்ததைத் தொடர்ந்து, லங்கா ஐஓசி (LIOC) மற்றும் சினோபெக் நிறுவனங்களும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளன.
பேருந்து கட்டணம் தொடர்பான முடிவு
எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைய, பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான முடிவு அடுத்த இரண்டு நாட்களுக்குள் எடுக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) அறிவித்துள்ளது.
ஆணைக்குழு கூடி இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜெனரல் நவோமி ஜெயவர்தன தெரிவித்தார்.
வருடாந்திர பேருந்து கட்டண திருத்தம் இன்று (01) முதல் அமல்படுத்தப்படும் என்று ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தாலும், எரிபொருள் விலை திருத்தம் காரணமாக அது அமல்படுத்தப்படாது என்றும் அவர் கூறினார்.














