இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து போயிங் வகை விமானங்களின் இயந்திர எரிபொருள் ஆழிகளை (switch) கட்டாயமாக ஆய்வு செய்யுமாறு அந் நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 12 ஆம் திகதி அகமதாபாத்தில் 260 பேரின் உயிரைக் காவு கொண்ட ஏர் இந்தியா விபத்து குறித்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) முதற்கட்ட அறிக்கையைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதிக்குள் விமான இயந்திர எரிபொருள் ஆழிகளை ஆய்வை முடிக்குமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் DGCA உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு குறிப்பாக போயிங் நிறுவன விமான மாதிரிகளுடன் தொடர்புடையது.
இதில் 737 மற்றும் 787 ட்ரீம்லைனர் (787-8/9/10) வகைகள் அடங்கும்.
விமான இயந்திர எரிபொருள் கட்டுப்பாட்டு ஆழாகள் கட்-ஆஃப் நிலையில் இருந்ததே ஏா் இந்தியா ‘AI 171’ போயிங் 787 விமானம் விபத்துக்குள்ளாக காரணம் என அகமதாபாத் விபத்து தொடர்பான முதல்கட்ட விசாணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், ஆகாஸா ஏா், இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களிடம் 150-க்கும் மேற்பட்ட போயிங் 787, 737 ரக விமானங்கள் உள்ளன.

















