ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படலாம் என நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா-உக்ரேன் போரை நிறுத்தும் முயற்சியில், அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அடுத்த 50 நாட்களுக்குள் ரஷ்யா போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதில்லை என்றால், ரஷ்யாவுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நாடுகளுடன் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாடுகளுக்கும் அமெரிக்காவின் secondary sanctions அமுல்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக மார்க் ருட்டே, அமெரிக்க செனட் உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் கூறியதாவது:
‘பிரேசில், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்கின்றன. போர்நிறுத்தம் ஏற்படாவிட்டால், இந்த நாடுகள் மீது 100% வரி விதிக்கப்படும். எனவே, ரஷ்ய ஜனாதிபதி புதினை அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் ரஷ்யா சந்திக்கும் பாதிப்பை இந்நாடுகளும் சந்திக்க நேரிடும்‘ எனத் தெரிவித்துள்ளார்















