சீனாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் (EU) இடையிலான உச்சிமாநாடு பெய்ஜிங்கில் வியாழக்கிழமை (24) தொடங்கியது.
இதில் தலைவர்கள் வர்த்தக மோதல் முதல் உக்ரேன் போர் வரையிலான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவுள்ளனர்.
பல வாரங்களாக அதிகரித்து வரும் வர்த்தகப் பதற்றம் மற்றும் சர்ச்சைகளுக்குப் பின்னர், சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான 50 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளைக் குறிக்கும் இந்த உச்சிமாநாட்டிற்கான எதிர்பார்ப்புகள் குறைவாகவே இருந்தன.
பெய்ஜிங்கின் வேண்டுகோளின் பேரில் இரண்டு நாட்கள் திட்டமிடப்பட்டிருந்த மாநாட்டின் கால அளவு திடீரென ஒரு நாளாகக் குறைக்கப்பட்டது.
வர்த்தக ஏற்றத்தாழ்வு, சந்தை அணுகல் மற்றும் அரிய மண் வளங்கள் தொடர்பான பிரச்சினைகள் நிகழ்ச்சி நிரலில் உள்ளன.
இந்த உச்சிமாநாட்டில், ஐரோப்பியத் தலைவர்கள் மின்சார வாகனங்கள் மற்றும் சீன தொழில்துறை அதிகப்படியான திறன் போன்ற விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.














