கொட்டாவயிலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த லொறி ஒன்று குருந்துகஹஹெதெக்ம பகுதியில் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தினை அடுத்து குறித்த லொறி தீப்பிடித்து எரிந்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்து எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

















