2025-26 ஆம் ஆண்டுகளுக்கான மதிப்புமிக்க ‘ஏ’ பிரிவு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் எந்தவொரு வீரருக்கும் வழங்கவில்லை.
கடந்த சீசனில் ஏ பிரிவில் இருந்த பாபர் அசாம் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகிய இரு வீரர்களும் பி பிரிவுக்கு தரமிறக்கப்பட்டனர்.
2025 ஆசியக் கிண்ணத்துக்கான அணியில் இரு கிரிக்கெட் வீரர்களும் சேர்க்கப்படாத சில நாட்களுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த சீசனில் பி பிரிவில் இருந்த பாகிஸ்தானின் டெஸ்ட் தலைவர் ஷான் மசூத் ‘டி’ பிரிவுக்கு தரமிறக்கப்பட்டார்.
அதே நேரத்தில் 2024 இல் மத்திய ஒப்பந்தத்தை தவறவிட்ட ஃபகார் ஜமான் ‘பி’ பிரிவில் சேர்க்கப்பட்டார்.
ESPN Cricinfo அறிக்கையின்படி, எந்த வீரரையும் ‘ஏ’ பிரிவில் சேர்க்க வேண்டாம் என்ற முடிவு அவர்களின் செயல்திறனைக் கருத்தில் கொண்ட பின்னர் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



















