முல்லைத்தீவு, முத்தையன்கட்டுகுளம் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு இராணுவ வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முல்லைத்தீவு பதில் நீதிவான் எஸ்.எச். மாரூஸ் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், இந்தக் குழுவினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர், அதில் இருவர் சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டனர்.
32 வயதான எதிர்மனசிங்கம் கபில்ராஜ் என்பவரின் மரணம் தொடர்பாக இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.
சம்பவம் தொடர்பாக ஒட்டுசுட்டான் பொலிஸார் ஒரு சார்ஜென்ட் உட்பட நான்கு இராணுவத்தினரை கைது செய்தனர்.















