மேற்கு அண்டார்டிக் பனிப்படலம் சரிந்து விழும் நிலையில் இருப்பதாக விஞ்ஞானிகள் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
ஒரு ஆய்வின்படி, சுமார் 760,000 சதுர மைல் பரப்பளவை உள்ளடக்கிய பனிக்கட்டிகள் உருகி வருகின்றன.
மேலும், அது முழுமையாக உருகினால், கடல் மட்டங்கள் உலகெங்கிலும் உள்ள பல நகரங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அளவுக்கு பேரழிவு தரும் அளவிற்கு உயரக்கூடும்.
கார்பன் டை ஆக்சைடு (CO2) அளவுகள் பல கடலோரப் பகுதிகளுக்கு அழிவை ஏற்படுத்தும் என்று அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தனர்.

பனிப்படலம் உருகும் போது, கடல் மட்டங்கள் 9.8 அடிக்கு மேல் உயரக்கூடும் என்று அவர்களின் பகுப்பாய்வு காட்டுகிறது.
இது உலகெங்கிலும் உள்ள முழு கடலோர நகரங்களையும் சமூகங்களையும் நீருக்கடியில் மூழ்கடிக்கும்.
குறிப்பாக இங்கிலாந்தின் ஹல், ஸ்கெக்னஸ், மிடில்ஸ்பரோ மற்றும் நியூபோர்ட் உள்ளிட்ட நகரங்கள் தண்ணீரில் மூழ்கடிக்கப்படும்.
அதேபோன்று ஐரோப்பாவில் நெதர்லாந்தின் பெரும்பகுதி, வெனிஸ், மான்ட்பெல்லியர் மற்றும் க்டான்ஸ்க் ஆகியவையும் நீரில் மூழ்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

















