தனமல்வில, ஹம்பேகமுவ பகுதியில் சுமார் ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, ஹம்பேகமுவ பொலிஸ் அதிகாரிகள் குழு நடத்திய சோதனையின் போது இரண்டு பெரிய கஞ்சா தோட்டங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
குறித்த சோதனையில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் கஞ்சா நன்றாக வளர்க்கப்பட்டிருந்த நிலையில் 50,000க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை வெட்டி பொலிஸார் தீயிட்டு எரித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
















