மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போதைய 12% மற்றும் 28% ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு, 5% மற்றும் 18% ஆகிய இரண்டு அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அமைப்பு செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரவுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாவது:
“சுதந்திர தின உரையில் குறிப்பிட்டபடி, அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை கொண்டு வர எங்கள் அரசு விரிவான திட்டம் ஒன்றை தயாரித்திருந்தது.
சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே அதன் நோக்கம்.
மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் பங்களிப்புடன் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில், மத்திய அரசு முன்மொழிந்த விகிதக் குறைப்புகள் மற்றும் சீர்திருத்தங்களை கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளது.
இது சாமானியர், விவசாயிகள், சிறு குறு தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கம், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயனளிக்கும். குறிப்பாக சிறு வணிகங்கள் மற்றும் தொழில்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கும்” என தெரிவித்துள்ளார்.
















