2050 ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயர்வதால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் 1.5 மில்லியன் அவுஸ்திரேலியர்கள் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என அந்நாட்டின் காலநிலை அறிக்கை ஒன்று மேற்கோள் காட்டி உள்ளது.
அதன்படி, வெள்ளம், சூறாவளிகள், வெப்ப அலைகள், வறட்சி மற்றும் காட்டுத்தீ போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு அவுஸ்திரேலியர்கள் தொடர்ந்து ஆளாக நேரிடும் என்றும் அறிக்கை கணித்துள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலியர்கள் ஏற்கனவே காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொண்டு வருவதாக அந்நாட்டின் காலநிலை மாற்ற அமைச்சர் கிறிஸ் போவன் கூறுகிறார்.
அவுஸ்திரேலியாவில் வெப்பநிலை ஏற்கனவே 1.5 பாகை செல்சியஸை எட்டியுள்ளது, மேலும் அது 3 பாகை செல்சியஸை எட்டினால், வெப்பத்தால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை 400 சதவீதம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என குறித்த அறிக்கை தெரிவித்துள்ளது.

















