கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் ஹஷிஷ், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மட்டக்குளி சிறிவர்தன வீதியில் நேற்று (29) இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, 33 கிலோ கிராம் ஹஷிஷ், 408 கிராம் ஹெரோயின், 200 போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேக நபர் மட்டக்குளி, சமித்புர பகுதியசில் வசிக்கும் 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் அப்பகுதியில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரின் நண்பர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மட்டக்குளி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














