இலங்கையில் நடந்து வரும் மனித – யானை மோதலில் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் 427 நபர்களும், யானைகளும் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை 314 யானைகள் இறந்துள்ளன.
அதே நேரத்தில் அதே காலகட்டத்தில் யானைத் தாக்குதல்களில் 113 பேர் உயிரிழந்துள்ளனர்.
யானைகள் இறப்புக்குப் பின்னால் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், மின்சார வேலிகள், வெடி மருந்துகள், ரயில் மோதல்கள் உள்ளிட்ட காரணிகள் பங்களிப்பு செலுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த யானைகளில் பெரும்பாலானவை இளம் யானைகள்.
பெரும்பலான இறப்புகள் கிழக்கு மாகணத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டில் மோதலில் யானை – மனித மோதலில் மொத்தம் 388 யானைகள் இறந்ததாகவும், 155 மனித இறப்புகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.














