காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க அமைதி திட்டம் குறித்த இறுதி ஒப்பந்தத்தை அடைவதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகள் எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் ஆரம்பமாகியுள்ளன.
இதன்மூலம் இஸ்ரேலிய பணயக் கைதிகளையும் பலஸ்தீன பணயக் கைதிகளையும் விடுவிப்பதற்கான ஒப்பந்தம் சாத்தியமாகும் என கூறப்படுகிறது.
ஹமாஸ் அமைப்பு, அமைதி திட்டத்தின் சில முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் பல கோரிக்கைகளுக்கு இதுவரையில் பதில் அளிக்கவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை எதிர்வரும் சில நாட்களில் சிறைபட்டவர்களின் விடுதலை குறித்து அறிவிக்க முடியும் என நம்புவதாக இஸ்ரேல் பிரதமர் கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.
மேலும், காஸா அமைதி திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் இந்த திட்டத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள் எனவும் திட்டம் அமுலுக்கு வந்தால் மத்திய கிழக்கில் முதல் முறையாக அமைதி நிலவும் எனவும் பணயக்கைதிகளை உடனடியாக மீட்போம் எனவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.














