கம்பளை, தொலுவ பகுதியில் நேற்று(06) இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் காரை செலுத்திய பெண்ணின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளனர்.
கம்பளை, தொலுவ பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வீதியின் ஓரத்தில் பயணித்த பெண்கள் மூவரும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
கம்பளை, தொலுவ பகுதியில் உள்ள விகாரைக்கு முன்பாக இந்த விபத்து நேர்ந்துள்ள நிலையில், குறித்த மூவரும் மதவழிபாடுகளுக்காக விகாரைக்கு சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.
இதன்போது நான்கு பெண்கள் காயமடைந்த நிலையில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மற்றொரு பெண் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் 70 மற்றும் 67 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை காரினை செலுத்திய பெண்ணின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 36 வயதுடைய பெண்ணொருவரே காரை செலுத்தியுள்ளதுடன் அவர் சாரதி பயிற்சி அனுமதிப் பத்திரத்தை மாத்திரம் பெற்றக்கொண்டவர் என தெரியவந்துள்ளது.
குறித்த பெண் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கம்பளை நகருக்கு சென்றிருந்த நிலையில் அவரது கணவர் காரை செலுத்தியிருந்ததாகவும் பின்னர் கணவர் தமது மனைவிக்கு காரை செலுத்துவதற்கு வாய்ப்பளித்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த கார் விகாரைக்கு அருகில் பயணித்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த நான்கு பெண்கள் மீதும் லொறியில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
காரை செலுத்திய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலிஸ் தடுப்பில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.














