மித்தெனியவில் அண்மையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கான இரசாயன மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பியல் மனம்பேரிக்கு விதிக்கப்பட்ட விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி வரை பியல் மனம்பேரியை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (09) உத்தரவிடப்பட்டுள்ளது.














