அடுத்த ஆண்டு இலங்கை, இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்துக்கான அணிகளின் பட்டியல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
20 அணிகள் கொண்ட இந்தப் போட்டியில் இறுதி மூன்று இடங்கள் இந்த வார தொடக்கத்தில் உறுதி செய்யப்பட்டன,
நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை ஆசியா/கிழக்கு ஆசியா-பசிபிக் தகுதிச் சுற்று மூலம் தங்கள் இடத்தைப் பெற்றன.
இதேவேளை, ஐரோப்பிய அணியான இத்தாலி நெதர்லாந்துடன் ஐரோப்பிய தகுதிச் சுற்று மூலம் முன்னேறிய பின்னர் போட்டியில் தனது முதல் தோற்றத்தை வெளிப்படுத்தும்.
2024 ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஏழு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு சாம்பியனாக இந்தியா இந்தப் போட்டியில் நுழையும்.
அதே நேரத்தில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுடன் இணைந்து இரண்டு முறை டி20 உலகக் கிண்ணத்தை வென்ற அணிகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
2026 போட்டி 2024 போட்டியின் அதே வடிவமைப்பைப் பயன்படுத்தி நடத்தப்படும்.
சூப்பர் எட்டு கட்டத்திற்கு முன்னதாக 20 அணிகள் ஐந்து அணிகளைக் கொண்ட நான்கு வெவ்வேறு குழுக்களாக வகைப்படுத்தப்படும்.
இதில் ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
சூப்பர் 8 போட்டிகளில் நான்கு அணிகளைக் கொண்ட இரண்டு குழுக்கள் இடம்பெறும்.
பின்னர் ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் அரையிறுதிக்கு முன்னேறும்.















