இங்கிலாந்தில் இன்றும் குடியிருப்பு வைத்தியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகளையும் சுகாதார செயலாளர் நிராகரித்து வரும் நிலையில் இன்று முதல் குடியிருப்பு மருத்துவர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடியிருப்பு வைத்தியர்களின் சம்பள உயர்வுக்கான கோரிக்கைகளை சுகாதார செயலாளர் ஏற்கனவே நிராகரித்ததுடன் மருத்துவர்களுக்கான ஊதியம் 2008 உடன் ஒப்பிடும்போது “மிகக் குறைவாக” இருப்பதாகவும் பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போராட்டம் காரணமாக தேசிய சுகாதார சேவையில் இடையூறுகள் ஏற்படும் போதும் அதற்கு எதிராக அரசாங்கத்தின் எதிர்ப்பு இருந்தபோதிலும், ஆயிரக்கணக்கான குடியிருப்பு மருத்துவர்கள் இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த 2023 அம்மா ஆண்டு மார்ச் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்ட 13வது வெளிநடப்பு இதுவாகும் எனவும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை 7 மணி முதல் எதிர்வரும் செவ்வாய் கிழமை வரை நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.















