இங்கிலாந்தில் 17 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேல்ஸில் (Cefn Fforest) செஃப்ன் ஃபோரஸ்ட்டில் 17 வயதுடைய (Lainie Williams) லைனி வில்லியம்ஸ் எனும் யுவதி ஒருவர் , (Cameron Cheng) கேமரூன் செங் என்ற 18 வயது இளைஞர் ஒருவரால் கடந்த வியாழக்கிழமை காலை 7.15 மணியளவில் வேல்ஸின் பிளாக்வுட்டில் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, அப்பகுதியில் மேலும் ஒரு 38 வயதுடைய பெண் ஒருவரும் குறித்த நபரால் தாக்குதலுக்குள்ளாகியுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் (Cameron Cheng) கேமரூன் செங் மீது கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு நாளையத்தினம் (17) (Newport Magistrates) நியூபோர்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
















