ராமநாதபுரம் திருவாடானை தாலுகா, தொண்டி கடற்கரைபகுதியில் கூட்டமாக டொல்பின்களை காண்பதற்கு அதிகளவான மக்கள் குவிந்துள்ளனர்.
கடற்பரப்பில் அரிய நிகழ்வாக ஏராளமான டொல்பின்கள் துள்ளிக் குதித்து விளையாடிய காட்சி மீனவர்களையும் உள்ளூர் மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அண்மையில் மன்னார் இலுப்பைக்கடவை கடற்கரைக்கு கூட்டமாக நீந்திவந்த டொல்பின்கள் ராமநாதபுரம் திருவாடானை தாலுகா, தொண்டி கடற்கரைபகுதிவரை நீந்திச்சென்றுள்ளன.
இன்று காலை முதல் டொல்பின்கள் கூட்டமாக கரையோர பகுதிகளில் துள்ளி குதித்து விளையாடிவருகின்றன
இந்த அற்புதமான காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
இந்த அரிய காட்சியை கரையோரபகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர்.
கடற்பரப்பில் அரிய நிகழ்வாக ஏராளமான டொல்பின்கள் துள்ளிக் குதித்து விளையாடிய காட்சி மீனவர்களையும் உள்ளூர் மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த அரிய காட்சியை கரையோரபகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.