பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான ஊழல் வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை உத்தரவிட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டில் ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க கடமையாற்றிய போது பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்குவதற்காக ஊவா மாகாண சபைக்கு சொந்தமான 6 வங்கி கணக்குகளின் நிலையான வைப்புகளை முதிர்வு காலம் முடிவடையவதற்கு முன்னர் பெற்றுகொண்டதால் அரசாங்கத்துக்கு 173 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டதாக சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















