செங்கோட்டைக்கு அருகில் நடந்த கார் குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குக் காரணமான மருத்துவர் உமர் உன் நபி பேசியுள்ள அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
சரளமாக ஆங்கிலம் பேசும் மருத்துவர் உமர், இந்த காணொளியில் ‘தற்கொலைக் குண்டுத் தாக்குதல்’ என்பது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றும், இது உண்மையில் ஒரு ‘தியாக நடவடிக்கை’ என்றும் நியாயப்படுத்துகிறார்.
இதேவேளை, டில்லி செங்கோட்டையில் போக்குவரத்து சிக்னலில் கார் ஒன்று, கடந்த 10ம் திகதி வெடித்து சிதறியது.
இந்த சம்பவத்தில் காரை இயக்கிய வைத்தியர் உமர் நபி உட்பட, 13 பேர் உயிரிழந்ததுடன் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதேவேளை, பயங்கரவாத தாக்குதல் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.














