பெர்த்தில் இன்று (21) ஆரம்பமான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா இங்கிலாந்தை 172 ஓட்டங்களுக்குள் சுருட்டியது.
இந்த இன்னிங்ஸில் அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது சிறந்த டெஸ்ட் திறனை பதிவு செய்தார்.
அதன்படி, முதல் இன்னிங்ஸில் ஸ்டார்க் 12.5 ஓவர்களில் 58 ஓட்டங்களை கொடுத்து ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இது டெஸ்ட் போட்டிகளில் ஸ்டார்க் 17 ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சந்தர்ப்பமாகும்.
மேலும் இங்கிலாந்துக்கு எதிராக 5 ஆவது முறையாகவும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய சந்தர்ப்பமாகும்.
இங்கிலாந்துக்கு எதிராக அவர் இப்போது 104 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 14 ஆவது அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் பெற்றார்.
இங்கிலாந்துக்கு எதிராக ஷேன் வோர்ன் 195 விக்கெட்டுகளுடன் முன்னணியில் உள்ளார்.



















