இங்கிலாந்தில் பில்லியன்டொலர் மதிப்புள்ள பணமோசடி வலையமைபு குறித்து தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த வலையமைப்பு, போதைப்பொருள் விற்பனையின் மூலம் ஈட்டப்படும் சட்டவிரோத பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றுவதன் மூலம் செயல்படுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் போதைப்பொருட்களை கொள்வனவு செய்பவர்கள் ரஷ்யாவின் உக்ரைன் போருக்கு மறைமுகமாக நிதியளிக்கக்கூடும் என்று தேசிய குற்றவியல் நிறுவனம் எச்சரிக்கிறது.
மேலும், இந்த அமைப்பு ரஷ்யாவின் இராணுவ முயற்சிகளை ஆதரிப்பதற்காக ஒரு வங்கியை வாங்கியதாகவும், அதன் மூலம் தடைகளைத் தவிர்க்க உதவியதாகவும் தெரியவந்துள்ளது.
பணத்தை எடுத்துச் செல்லும் வலையமைப்புகள் இந்த உலகளாவிய திட்டத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தேசிய குற்றவியல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, இந்த நடவடிக்கையின் மூலம் இதுவரை 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 25 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் டிஜிட்டல் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



















