(Hackney, east London) ஹாக்னி, கிழக்கு இங்கிலாந்தை சேர்ந்த பார்த்திமஸ் எஹிமெரே (Barthimaus Ehiemere ) எனும் நபருக்கு எதிராக 47 குற்றங்கள் பதிவுசெய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததற்காகவும் மேலும் அந்த துஷ்பிரயோகப் படங்களை ஏனைய பாலியல் குற்றவாளிகளுக்கு விற்பனை செய்ததற்காகவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரால் ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக 47 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு (Snaresbrook Crown Court ) ஸ்னேர்ஸ்புரூக் கிரவுன் நீதிமன்றத்தில் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
2020 ஆம் ஆண்டில், அவரது தொலைபேசியில் குழந்தைகளின் ஆபாச படங்களை விநியோகிப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் கடந்த 2019 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இரண்டு 12 வயது சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றங்கள் உட்பட, 12 முதல் 16 வயது வரையிலான சிறுவர்களை நிகழ்நிலையில் பாலியல் ரீதியாக கவர்தல் போன்ற குற்றங்களையும் செய்துள்ளார்.
இந்நிலையில் விசாரணை செய்யும் பொலிஸார் அவரது சாதனங்களிலிருந்து சுமார் 1,600 க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்களைக் கண்டுபிடித்ததுடன் மேலும் அவர் சிறுவர்களிடமிருந்து பாலியல் படங்களை பெற பரிசுகள் மற்றும் பணம் என்பவற்றை கொடுத்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு, ஆன்லைன் குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்தின் தீங்கு விளைவிக்கும் தன்மையை எடுத்துரைப்பதுடன் குழந்தைகளின் இணைய பாவனை குறித்து எச்சரிக்கின்றது.














