பங்களாதேஷில் இன்று(21) இலங்கை நேரப்படி 10.08மணியளவில் வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் 06 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5.5 ரிச்டர் அளவில் பதிவான நிலநடுக்கமானது தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கோரஷால் பகுதியில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலும் இடிபாடுகள் விழுந்ததாலும் கட்டிடங்களின் சுவர்கள் சரிந்ததாலும் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொல்கத்தா மற்றும் கிழக்கு இந்தியாவின் பிற பகுதிகளிலும் பலத்த அதிர்வுகள் உணரப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்குள்ள குடியிருப்பாளர்கள் வீடுகளிலிருந்தும் அலுவலகங்களிலிருந்தும் வெளியேறியுள்ளதுடன் , கொல்கத்தாவில், வீடுகளில் இருந்த மின்விசிறிகளும் சுவரில் தொங்கிய பொருட்களும் லேசாக அசைந்ததாக மக்கள் தெரிவித்தனர்.


















