இங்கிலாந்தின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சர்ச்சைக்குரிய சீன “சூப்பர் தூதரகத்திற்கு” ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது இங்கிலாந்தில் உள்ள ஒரு புதிய சீன தூதரகத்தைப் பற்றிய திட்டம் என்பதுடன் மேலும் அது சீனாவால் உளவு பார்க்க பயன்படுத்தப்படலாம் என்ற தேசிய பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதனால் இந்த தூதரக திட்டம் குறிப்பிடத்தக்க சர்ச்சைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்புதலுக்கான முடிவு டிசம்பர் 10 ஆம் திகதி எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் இது இங்கிலாந்து மற்றும் பெய்ஜிங்கின் உறவில் அதிக கவனம் செலுத்தப்படும் நேரத்தில் இந்த திட்டம் வருவதால் பெய்ஜிங்குடனான இங்கிலாந்தின் உறவு பெரும் ஆய்வுக்கு உட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புத்தாண்டு தினத்தில் இங்கிலாந்து பிரதமர் சீனாவுக்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாகவும், ஜனவரி மாத இறுதியில் அவர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக சமீபத்திய உளவு பார்க்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசாங்கத்தின் பாதுகாப்பு கவலைகள் இருந்தபோதிலும், நாட்டின் பொருளாதார மற்றும் ஆராய்ச்சி நலன்களுக்காக இங்கிலாந்து அரசாங்கம் சீனாவுடன் வேலை செய்ய விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் தேசிய பாதுகாப்பு எப்போதும் முதன்மையாக இருக்கும் என்றும் வலியுறுத்தப்படுகின்றது.
2024 ஆம் ஆண்டு ஸ்டார்மரின் தொழிற்கட்சி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இங்கிலாந்து கோபுரத்திற்கு அருகிலுள்ள குறித்த அந்த இடத்திற்கான திட்டமிடல் விண்ணப்பத்தை பெய்ஜிங் மீண்டும் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.














