ஒன்ராறியோவின் பிராம்ப்ட நகரில் அமைந்துள்ள வீடொன்றில் வியாழக்கிழமை (20) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த துயரச் சம்பவத்தில் வீட்டிலிருந்த இருவர் உயிரிழந்ததாகவும், ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் பலத்த காயமடைந்ததாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
சம்பவ இடத்திலேயே இரண்டு பெரியவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
தீக்காயங்கள் மற்றும் புகையை சுவாசித்ததால் ஆபத்தான நிலையில் மூன்று பெரியவர்களும் ஒரு குழந்தையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக துணை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்தக் குழந்தை நான்கு முதல் ஐந்து வயதுக்குட்பட்டது என்று பொலிஸார் கூறினர்.
விபத்துக் குறித்து பிராம்ப்டன் தீயணைப்புப் பிரிவு தலைவர் ஆண்டி க்ளின் கூறுகையில், மெக்லாஃப்லின் மற்றும் ரிமெம்பரன்ஸ் வீதிகளின் சந்திப்புகளுக்கு அருகில் அமைந்துள்ள குறித்த வீட்டில் அதிகாலை 2:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறினார்.


















