ரஷ்யாவிற்காக வேலை செய்ய முன்னாள் சீர்திருத்த ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் (MEP) ரிஃபார்ம் யுகே வேல்ஸின் முன்னாள் தலைவருமான நேதன் கில் (Nathan Gill) எவ்வாறு இலஞ்சம் பெற்றார் என்பது தொடர்பில் பொலிஸார் விளக்கியுள்ளார்.
அவர் ஐரோப்பிய பாராளுமன்றத்திலோ அல்லது ஊடகங்களிலோ ரஷ்ய சார்பு கருத்துக்களைப் பரப்ப ( Oleg Voloshyn) ஒலெக் வோலோஷின் என்ற அரசியல்வாதியிடம் இருந்து இலஞ்சம் பெற்றுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கில், மான்செஸ்டர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டபோது , பொலிஸார் அவரது தொலைபேசியைக் கைப்பற்றியதுடன் அதில் பணப் பரிமாற்றங்கள் மற்றும் ரஷ்ய கருத்துக்களைப் பரப்புவதற்கான ஆதாரங்கள் பேச்சுவார்த்தைகள் இருந்தமையினை அவதானித்துள்ளனர்.
தனது பணியாளரின் அறிவுறுத்தலின் பேரில், கில் ஒருமுறை ஒரு உக்ரேனிய தொலைக்காட்சியில் தோன்றி, ஒரு ரஷ்ய சார்பு அரசியல்வாதியின் மீதான விசாரணையை விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இந்தச் செயல்பாட்டிற்காக கில்லுக்கு பத்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் மேலும் அவரது வீட்டில் பணக் குவியல்களும் மின்னணு சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.














