சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல மின் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின் தடைகள் மற்றும் சிக்கல்கள் குறித்து இலங்கை மின்சார சபையின் மொபைல் செயலியைப் பயன்படுத்தி பொதுமக்கள் முறைப்பாடுகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.














