மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இரால்குழி, ஷாபிநகர் கிராம உத்தியோகத்தர்கள் பிரிவைச் சேர்ந்த சில குடும்பங்கள் இடம்பெயர்ந்து இரண்டு இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .
47 குடும்பங்களைச் சேர்ந்த 116 பேரும், மூதூர் அல்ஹிதாயா மகா வித்தியாலயத்திலும் ஷாபிநகர் கிராம உத்தியோகத்தர் பிரிவின் – வேதத்தீவு கிராமத்தைச் சேர்ந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மூதூர் -சம்பூர் பிரதான வீதியின் புளியடி சந்தியில் வெள்ளநீர் ஊடறுத்துச் செல்வதால் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் போக்குவரத்து செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.














