update –
மாவில் ஆறு பகுதியில் அதிகரித்து வரும் வெள்ளத்தில் சிக்கிய 121 பேரை இலங்கை விமானப்படை மீட்புக் குழுக்கள் இன்று வெளியேற்றியுள்ளன.
…………………
இலங்கை விமானப்படையினால் மாவிலாறு பகுதியில் மீட்பு மற்றும் வான் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இன்று காலை (2025.11.30), மாவிலாறு பகுதியில் மீட்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படையைச் சேர்ந்த பெல்–412 ஹெலிகாப்டர், ஜெட் ரேஞ்சர் (206) ஹெலிகாப்டர், KA 360ER கண்காணிப்பு விமானம் மற்றும் MI-17 ரக ஹெலிகொப்டர் ஆகியன மீட்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.
இதேவேளை திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பையடுத்து ஏற்பட் வெள்ளத்தினால் பாதிக்ப்பட்ட சேருவல, சோமாபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக்; கொண்ட 55 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (30) இதுவரை விமான மூலம் மீட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த இடை முகாமைத்துவம் தெரிவித்துள்ளது
இவ்வாறு வெள்ளத்தி;ல் இருந்து விமானம் ஊடாக மீட்கப்பட்டவர்களை சீனாபே விமான படைதளத்திற்கும் சேருவல மகாவலி விளையாட்டு மைதானத்திற்கும் கொண்டுவரப்பட்டனர்
இதேவேளை மேலும் 22 பேர் விமான மூலம் மீட்கப்பட்டு வருகின்றதுடன் கடல் மற்றும் விமான மூலம் தொடர்ந்து மீட்கும் பணி இடம்பெற்றுவஐகின்றதாக தெரிவித்தனர்














