யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் 3, 729 எரிவாயு சிலிண்டர்கள் (Litro Gas) எடுத்துவரப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
மேலும், நாளைய தினம் 1,716 எரிவாயு சிலிண்டர்களும், நாளை மறுதினம் 2,217 எரிவாயு சிலிண்டர்களும் எடுத்து வரப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேநேரம், கட்டம் கட்டமாக தொடர்ச்சியாக எரிவாயு சிலிண்டர்கள் எடுத்து வரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.












