உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான அமைதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் அமெரிக்காவும் ஒரு சமரசத்தை எட்டவில்லை என்று கிரெம்ளின் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் டொனால்ட் ட்ரம்பின் உயர்மட்ட தூதர்களுக்கும் இடையே ஐந்து மணி நேர கிரெம்ளின் சந்திப்புக்குப் பின்னர் இந்த சமரசம் ஏற்படவில்லை.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மிக மோசமான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தனது ஜனாதிபதி பதவியின் முழுமையான வெளியுறவுக் கொள்கை நோக்கங்களில் ஒன்றாகும் என்று ட்ரம்ப் பலமுறை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி சில சமயங்களில் புட்டின் மற்றும் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆயோரை பாராட்டியும் திட்டியும் உள்ளார்.












