• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வெள்ள அனர்த்தம் தொடர்பில்  உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

வெள்ள அனர்த்தம் தொடர்பில் உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/12/03
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள்,உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடாது என்ற தோரணையில் எவரும் எங்களை விமர்சிக்ககூடாது. உண்மை வெளிவந்தால் தான் நிவாரணப்பணிகளும் சரியான முறையில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஊடாக இந்த நிவாரணப்பொருட்கள் வழங்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன
இதன் முதல் கட்டமாக களுவாஞ்சிகுடி பகுதியில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட சுமார் 1000 பேருக்கான நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தலைமையில் களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மே.வினோராஜின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தில் போரதீவுப்பற்ற பிரதேசசiபின் தவிசாளர் வி.மதிமேனன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிவாரண வேலைத்திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த சுமந்திரன்,

மலையகத்திற்கு விஜயம் செய்த போது பல பரிதாபகரமான சம்பங்கள் தொடர்பில் அறிந்து கொண்டோம். சில இடத்தில் முழு கிராமமுமே புதையுண்ட நிலை காணப்படுகின்றது. அந்தநேரத்தில் வீடுகளில் இல்லாத சிலர் தப்பி பிழைத்துள்ளனர். அங்கிருந்த ஒருவர் தனது முழுக்குடும்பமுமே புதையுண்டுள்ளதாகவும் மீட்பு நடவடிக்கைகளுக்கு யாரும் வரவில்லை, மூன்று நாட்களாக எப்படியாவது தமது குடும்பத்தினரின் உடல்களை மீட்கவேண்டும் என போராடி வருவதாக தெரிவித்தார்.

அங்கு சிலர் தமது பணத்தினைக் கொடுத்து டிசல் இயந்திரங்களை எடுத்து தேடும் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் நிவாரண பணிகளில் அனைவரும் கட்சி பேதங்கள் கடந்து; ஒன்றிணைய வேண்டும் என அரசாங்கமும் சொல்கின்றது நாங்களும் கூறுகின்றோம் அனைவரும் கூறுகின்றார்கள்.

ஆனால் இந்த விடயங்களில் ஏனைய கட்சிகளை புறந்தள்ளி வைப்பதில் அரசாங்கம் மும்முரமாக செயற்படுவது வெளிப்படையாக தெரிகின்றது.
நேற்றை தினம் கண்டி அரசாங்க அதிபரை சந்தித்த போது கம்பளை பகுதியில் 19 பேர்தான் உயிரிழந்துள்ளதாக சொல்கின்றார். நாங்கள் சென்ற முதல் இடத்திலேயே 26 உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 50க்கும் மேற்பட்டவர்கள் புதையுண்டுள்ளதாக கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு பல கிராமங்கள் பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. அந்த பகுதிகளில் மக்கள் சென்று மீள வாழ முடியாத வகையில் அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளது.

நேற்று நாங்கள் சென்ற பதுளை மாவட்டம்,நுவரேலியா மாவட்டங்களில் பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது. அங்குள்ள மக்கள் எங்களைக்கண்டதும் கண்ணீருடன் தமது கஸ்டங்களை கூறினார்கள். அப்பகுதியில் உடனடி நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்படாதது மக்கள் மூலம் அறியமுடிந்தது.

இதனை நாங்கள் கூறை கூறவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. அரசாங்கத்தினை குறை கூறுவதற்காக இதனை சொல்லவில்லை. மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் சென்றடையவேண்டும், மக்களின் உயிரிழப்புகள் எத்தனையென்பது தெளிவாக தெரியவேண்டும். உண்மையினை முழுப்புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கமுடியாது.

நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கின்ற போது முகத்தினை இறுக்கமாக வைத்துக்கொண்டு பத்து பதினைந்து பேர்தான் உயிரிழந்துள்ளார்கள் என அரசாங்கம் பதில் சொன்னால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்தவேளையில் அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடாது என்ற தோரணையில் எவரும் எங்களை விமர்சிக்ககூடாது. உண்மை வெளிவந்தால் தான் நிவாரணப்பணிகளும் சரியான முறையில் நடைபெறும்.

விசேடமாக ஊடகங்களை இதனை விமர்சிப்பதை பார்க்க மிகவும் அருவறுப்பாக இருக்கின்றது. செய்தியை பிரசுரிப்பதுதான் அவர்களின் வேலையாக இருக்கவேண்டுமே தவிர செய்திகளின் பின்பக்கமான கிரிக்கட் வர்ணணை போன்று தமது விமர்சனங்களை முன்வைப்பது அருவறுக்கத்தக்க செயலாகும்.

இந்த பேரிடர் எவ்வளவு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியாமல் அவர்கள் அரசியல் செய்துகொண்டிருப்பதை காணமுடிகின்றது. இந்தநேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்துதான் மக்களை காப்பாற்றவேண்டும்.

இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயாராகயிருக்கின்றோம் என்று கூறுகின்றோம். சுனாமி அனர்த்தம் வந்த வேளையில் அன்றைய அரசாங்கமே வடகிழக்கில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து கட்டமைப்பினை ஏற்படுத்தியது.

அந்த பிரதேசங்களிலே ஆளுகை செய்தவர்கள் அவர்கள்.அந்த வேளையில் அதனை தடுப்பதற்கு நீதிமன்றபடியேறிய ஜேவிபியினருடன் இணைந்து வேலைசெய்வதற்கு நாங்கள் தாயராகயிருக்கின்றோம் என்றால் வேறு யாருடன் நாங்கள் சேர்ந்து செயற்படமாட்டோம். அனைவருடமும் இணைந்து நாங்கள் செயற்படுவோம்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குளிர்காலத்தில் இங்கிலாந்தில் நோயாளிகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் – செவிலியர்கள் அச்சம்!

Next Post

தனது கிறிஸ்துமஸ் பண்டிகை செய்தியை வெளியிட்ட வேல்ஸ் இளவரசி!

Related Posts

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!
இலங்கை

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

2026-05-26
சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!
இலங்கை

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுஒன்று டுபாயில் கைது!

2026-05-26
ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!
இலங்கை

ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

2026-05-26
குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!
இலங்கை

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!

2026-05-26
யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர் – உதவிய உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணை!
இலங்கை

யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர் – உதவிய உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணை!

2026-05-26
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !
இலங்கை

ராஜித சேனாரத்னவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தளர்வு!

2026-05-26
Next Post
தனது கிறிஸ்துமஸ் பண்டிகை செய்தியை வெளியிட்ட வேல்ஸ்  இளவரசி!

தனது கிறிஸ்துமஸ் பண்டிகை செய்தியை வெளியிட்ட வேல்ஸ் இளவரசி!

இங்கிலாந்து மருத்துவ சங்கத்தின் வேலைநிறுத்தம் குறித்து சுகாதாரச் செயலாளர் அதிருப்தி!

இங்கிலாந்து மருத்துவ சங்கத்தின் வேலைநிறுத்தம் குறித்து சுகாதாரச் செயலாளர் அதிருப்தி!

இலங்கையின் மீட்சிக்கு பல்வேறு கட்சி ஆதரவு – இங்கிலாந்து நாடாளுமன்றக் குழு உறுதி!

இலங்கையின் மீட்சிக்கு பல்வேறு கட்சி ஆதரவு - இங்கிலாந்து நாடாளுமன்றக் குழு உறுதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

0
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

0
சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுஒன்று டுபாயில் கைது!

0
ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

0
குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!

0
கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

2026-05-26
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

2026-05-26
சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுஒன்று டுபாயில் கைது!

2026-05-26
ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

2026-05-26
குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!

2026-05-26

Recent News

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

2026-05-26
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

2026-05-26
சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுஒன்று டுபாயில் கைது!

2026-05-26
ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

2026-05-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.