• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டு இயக்கம் நாடாளுமன்றத்தில் ஆரம்பம்

பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டு இயக்கம் நாடாளுமன்றத்தில் ஆரம்பம்

16 days of action movement against gender-based violence begins in Parliament

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/25
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான 16 நாட்கள் உலகளாவிய செயற்பாட்டு இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று (25) நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடையாளச் சின்னங்கள் அணிவிக்கப்பட்டன.

இதற்கு இணையாக, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றப் பணியாளர்களும் செம்மஞ்சள் அல்லது செம்மஞ்சள் கலந்த ஆடைகளை அணிந்து இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) ஆதரவுடன் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சிக்கு இணையாக, நாடாளுமன்றத்திற்குள் 16 நாட்களுக்கான நிகழ்ச்சித் தொடரொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இம்முறை உலகளாவிய செயற்பாட்டு இயக்கத்தின் தொனிப்பொருளாக “பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கு ஒன்றிணைவோம்: நீதியை நிலைநாட்டுவோம், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்போம், தண்டனையிலிருந்து தப்பிப்பதை முடிவுக்குக் கொண்டுவருவோம்” என்பது அமைந்துள்ளது.

இலங்கையில் இம்முறை இச்செயற்பாட்டு இயக்கம் “இது எனது உரிமை” என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றையும் விடுத்தார்.

இதன்போது, நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை நடைபெறும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் உலகளாவிய செயற்பாட்டு இயக்கத்தை அடையாளப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்துடன் இணைந்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் முன்னெடுக்கும் நிகழ்ச்சிக்கு இலங்கைப் நாடாளுமன்றத்தின் ஆதரவைத் தெரிவிப்பதாக அவர் சபைக்கு அறிவித்தார்.

அத்துடன், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளைத் தடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரதும் கூட்டுப் பங்களிப்பும் பொறுப்புணர்வும் அவசியம் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

16 நாட்கள் செயற்பாட்டு இயக்கமானது ஒவ்வொரு வருடமும் நவம்பர் 25ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தன்று ஆரம்பமாகி, டிசம்பர் 10ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று நிறைவடையும் உலகளாவிய இயக்கமாகும்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் அனைத்து வகையான வன்முறைகள் தொடர்பிலும் சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டுதல், இத்தகைய வன்முறைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் வன்முறைகளற்ற சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட ஊக்குவித்தல் ஆகியன இச்செயற்பாட்டு இயக்கத்தின் நோக்கங்களாகும்.

அதற்கமைய, பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்குச் சட்ட மற்றும் கொள்கை ரீதியான நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, சமூகத்தின் அனைத்துத் தரப்பினரதும் அர்ப்பணிப்பும் பொறுப்புணர்வும் அவசியம் என்பதையும் இம்முறை செயற்பாட்டு இயக்கம் வலியுறுத்துகிறது.

Related

Tags: 16 days of action movement against gender-based violence begins in Parliament
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இஸ்ரேலில் ஆட்சியமைக்க முதல் கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்து!

Related Posts

இடி, மின்னல் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை

மின்னல் தாக்க அபாயம்; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

2026-11-25
ஆனந்த பாலிதவுக்கான விளக்கமறியல் நீடிப்பு! 
இலங்கை

ஆனந்த பாலிதவுக்கான விளக்கமறியல் நீடிப்பு! 

2026-11-25
மெட்ரோபொலிட்டன் பொலிஸ் பிரிவு பெண்களுக்கு எதிரான அமைப்பாக  தொடர்ந்து  செயற்படுவதாக குற்றச்சாட்டு
இங்கிலாந்து

மெட்ரோபொலிட்டன் பொலிஸ் பிரிவு பெண்களுக்கு எதிரான அமைப்பாக தொடர்ந்து செயற்படுவதாக குற்றச்சாட்டு

2026-11-25
3. இலங்கை மகளிர் அணிக்கு சர்வதேச கிண்ணம்!
கிரிக்கெட்

3. இலங்கை மகளிர் அணிக்கு சர்வதேச கிண்ணம்!

2026-11-25
கரையோரப் பகுதிகளை  கடலரிப்பிலிருந்து பாதுகாக்க  11 மில்லியன் பவுண்ஸ்  நிதி  ஒதுக்கீடு
இங்கிலாந்து

கரையோரப் பகுதிகளை கடலரிப்பிலிருந்து பாதுகாக்க 11 மில்லியன் பவுண்ஸ் நிதி ஒதுக்கீடு

2026-11-25
ராஜாங்கனை சத்தரதன தேரரை கைது செய்ய பிடியாணை உத்தரவு!
இலங்கை

ராஜாங்கனை சத்தரதன தேரரை கைது செய்ய பிடியாணை உத்தரவு!

2026-11-25

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டு இயக்கம் நாடாளுமன்றத்தில் ஆரம்பம்

பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டு இயக்கம் நாடாளுமன்றத்தில் ஆரம்பம்

0
இஸ்ரேலில் ஆட்சியமைக்க முதல் கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்து!

இஸ்ரேலில் ஆட்சியமைக்க முதல் கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்து!

0
இடி, மின்னல் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை!

மின்னல் தாக்க அபாயம்; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

0
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரிய மாவட்ட ஆட்சியர்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: