இங்கிலாந்தில் (NHS) தேசிய சுகாதார அமைப்பின் போதுமான தயாரிப்பு இல்லாமையினாலும் ‘மரியாதை குறைவான’ நடைமுறைகளாலும் , வரவிருக்கும் குளிர்காலத்தில் நோயாளிகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று செவிலியர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
அனுமதிக்காக 12 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், படுக்கை வசதி கொள்ளளவு கவலையளிக்கும் வகையில் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தச் சூழல், எதிர்பார்க்கப்படும் காய்ச்சல் உச்சம் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் ஐந்து நாள் ரெசிடென்ட் மருத்துவர்களின் வேலைநிறுத்தம் ஆகியவற்றால் மேலும் மோசமடையும் என்று கூறப்படுகிறது.
இதேவேளை, அரசு இந்த நிலையை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஒப்புக்கொண்டு, அவசர சிகிச்சை மற்றும் வசதிகளை மேம்படுத்த 450 மில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்வதாகக் கூறியபோதிலும், (Royal College of Nursing ) ராயல் காலேஜ் ஆஃப் நர்சிங் இந்த அடிப்படைப் பிரச்சினையை தீர்ப்பதில் அரசாங்கத்தில் விரைவான நடவடிக்கை இல்லை என்று குற்றம் சாட்டுகிறது.













