இலங்கையில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிற்கு பதிலளிக்கும் விதமாக நிவாரணப் பொருட்கள், ஒரு உயர்மட்ட தேடல் மற்றும் மீட்புக் குழுவுவை சுமந்து வந்த பாகிஸ்தான் விமானப்படையின் C-130 விமானம் நேற்று மாலை (03) கொழும்பை வந்தடைந்தது.
கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரால் ஒப்படைக்கப்பட்ட இந்த உதவித் தொகையை பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு முறைப்படி பெற்றுக்கொண்டார்.
பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) கூற்றுப்படி, பிரதமர் மொஹமட் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் உத்தரவின் பேரில், 47 பேர் கொண்ட சிறப்பு பாகிஸ்தான் இராணுவ தேடல் மற்றும் மீட்புப் பிரிவு, 6.5 தொன் அத்தியாவசிய உபகரணங்களும் இதில் அடங்கும்.
முன்னதாக டித்வா சூறாவளியைத் தொடர்ந்து நிவாரணப் பணிகளை ஆதரிப்பதற்காக, பாகிஸ்தான் இலங்கைக்கு 200 தொன் மனிதாபிமான உதவிகளை கடல் மார்க்கமாக அனுப்பி வைத்திருந்தது.
மனிதாபிமான ஆதரவு மற்றும் பிராந்திய ஒற்றுமைக்கான அதன் நீண்டகால உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, இலங்கைக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்குவதாக பாகிஸ்தான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.












