நெய்னா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹிர் நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன முன்னிலையில் இன்று (05) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த முகம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே நெய்னா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹிர் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்.
கற்பிட்டி திகழி முஸ்லிம் வித்தியாலயத்தில் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த நெய்னா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹிர், 1991ஆம் ஆண்டு கற்பிட்டி பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலுக்குள் நுழைந்தார். அவர் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராகக் கடமையாற்றியுள்ளார்.
















