உக்ரேனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் இருந்து உக்ரேன் படையினர் வெளியேற வேண்டும், இல்லையொனில் மொஸ்கோ குறித்தப் பகுதியை கைப்பற்றும் என்று என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீண்டும் எச்சரித்துள்ளார்.
அதேநேரம், உக்ரேனில் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்த எந்தவொரு சமரசத்தையும் அவர் நிராகரித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அவர், குறித்த பகுதிகளை வலுக்கட்டாயமாக விடுவிப்போம், இல்லையெனில் உக்ரேனிய படைகள் இந்தப் பகுதிகளை விட்டு வெளியேறும் – என்றார்.
டான்பாஸின் 85% பகுதியை மொஸ்கோ கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது.
அதேநேரம், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்கும் திட்டத்தை நிராகரித்துள்ளார்.
அமெரிக்க அமைதித் திட்டம் குறித்து விவாதிக்கும் தனது பேச்சுவார்த்தையாளர்கள், செவ்வாய்க்கிழமை (02) மொஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் ரஷ்யாவின் தலைவர் “போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவார்” என்று நம்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதை அடுத்து புட்டினின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.
ரஷ்யா 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது.
மேலும் தற்போது மொஸ்கோ உக்ரேன் பிரதேசத்தில் சுமார் 20% கட்டுப்பாட்டினை கொண்டுள்ளது.
மோதல்களினால் கடுமையான உயிரழப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், அண்மைய வாரங்களில், தென்கிழக்கு உக்ரேனில் ரஷ்ய படையினர் மெதுவாக முன்னேறி வருகின்றன.














