விளம்பரத் தரநிலைகள் ஆணையம் (ASA) ஆனது நான்கு வெவ்வேறு சப்ளிமென்ட் பிராண்டுகளான (Nutrisslim, Nutreance, Muxue Trade, மற்றும் Impact Herb) நியூட்ரிஸ்லிம், நியூட்ரியன்ஸ், மக்ஸூ டிரேட் மற்றும் இம்பாக்ட் ஹெர்ப்ஸ் ஆகியவற்றின் விளம்பரங்களைத் தடை செய்துள்ளது.
குறித்த சப்ளிமென்ட்கள் விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட் அல்லது சிறுநீர் ஓட்டம் போன்ற மருத்துவப் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க முடியும் என்று தவறாகக் கோரியதே இந்த தடைக்கு காரணமாகும்
மேலும், Lifelab Testing மற்றும் Self Check ஆகிய இரண்டு வீட்டுப் பரிசோதனை கிட் நிறுவனங்களின் விளம்பரங்களும் தடை செய்யப்பட்டன. ஏனெனில் அவை புரோஸ்டேட்-குறிப்பிட்ட ஆன்டிஜென் (PSA) சோதனைகள் மட்டுமே புரோஸ்டேட் புற்றுநோயைக் கண்டறியவோ அல்லது நிராகரிக்கவோ முடியும் என்று தவறாகக் கூறியமையினால் இவை தடை செய்யப்பட்டன.
உணவுப் பொருட்களான சப்ளிமென்ட்கள் மருத்துவ உரிமைகோரல்களைச் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பதை விளம்பரத் தரநிலைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் இந்த தவறான விளம்பரங்கள் மக்களை முறையான மருத்துவ ஆலோசனையிலிருந்து திசைதிருப்பி அவர்களுக்கு விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
புரோஸ்டேட் புற்றுநோய் UK என்ற அறக்கட்டளை, சப்ளிமென்ட்கள் புரோஸ்டேட் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க, குணப்படுத்த அல்லது தடுக்க எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி, இந்தத் தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.












